Sunday, December 2, 2018

ராசி

             ராசி ற முட நம்பிக்கை இந்த 21 ஆம் நூற்றாண்டு ல கூட இருக்கு ..கைம்பெண் ஆண்களுக்கு மூன்னாடி வர கூடாது னு இந்த மாறி மூட பக்தி  இன்னும் இருக்கு ..அது விஞ்ஞான உலகம் ..நீங்க நார்திக வாதிய   னு யோசிக்காதிங்க...வெள்ளி ,செவ்வாய் விளக்கு ஏத்துறதையும் ,அம்மனுக்கு கூழ் ஊத்துறத்தையும் தப்பு சொல்ல ல ..நமக்கு மேல ஓரு சக்தி இருக்கு அது ஏசுவா ,அல்லவா ,முருகன னு தெரியல ..தெரிச்சுக்கவும் விரும்பல  ...அய்யே  அவ  முகத்துல முழிச்சிய ராசியில்லாத வ ..என்ன நடக்குமே னு அவுங்க முன்னாடியே சொல்றது..புதுச ஒரு பெண் கல்யாணம் ஆகி வந்த அப்புறம் பல்லு  போன கிழவி செத்த கூட அந்த பெண்ணு  தான் காரணம் னு சொல்றது  எல்லாம் dinosaurs காலத்து ல கேட்டது இப்ப கண் கூட பார்க்கும் போது மனசு வழிக்கிது..கல்யாணம் ஆகி மூழுச 5 மாசம் புருஷன் கூட ஒழுங்க வாழாத   பெண்ண கைம்பெண் னு சடங்கு ,சம்பர்தாயம் எல்லாம் பண்ணி நல்லதுக்கு வாரத..உங்க பெண்ண கூட்டிட்டு  வராதிங்க அண்ணி னு மனசு ல கொஞ்சம் கூட இறம்  இல்லாம சொல்லுவங்க ..இத  கேட்டு ஒரு ஜோடி கண்கள் கண்ணீர் வடிக்கும் சத்தம் இல்லாம  கதவுக்கு  பின்னாடி..இத  விட கொடுமை பிறக்குறது  முன்னாடியே அப்பான  முழுங்கிடு னு வாய் கூசம சொல்லுவங்க அந்த குழந்தை இன்னும் உலகத்தையே  பார்க்கல ..அது குள்ள அதோட  ராசி அ சொல்றது....பெண்ணு பார்க்குறது முன்னாடி அந்த மாப்பிள்ளை வீட்டு நாய் குட்டிக்கு அடிப்பட்டா கூட அந்த பெண் ராசியில்ல னு  சொல்றது அவுங்க கிட்ட மட்டும் சொல்லாம  எல்லாரு  கிட்டையும் சொல்றது.அந்த பெண்ண பாக்குரிங்கள அய்யே  அந்த பெண்ணு வேண்டாம் ராசியில்ல  ...   எங்க பெண்ணுக்கு மட்டும் தான் ராசி யா அந்த பையனுக்கு இல்லையா..ஏப்பா  பாரு பெண்ணு மேல தான் தப்பா..


 
 நான் பிறந்த அன்று மகாலட்சுமி பிறந்துவிட்டாள்  என்று மகிழ்ந்த சொந்தம் எங்கே....
நெற்றியில் திலகமிட்டு
புத்தாடை உடுத்தி
மாமன் சீர் செய்து
ஊற்றார்  உறவினர்கள் கூடி
ஆடு அறுத்து
கேடா வெட்டி
விழாவிற்கு வந்து
வீட்டில் பெண் இருக்கும் விசியத்தை பரப்பி
அப்பே வந்த சொந்த  பந்தம் .
அதே பெண் கணவனை இழந்த நிலையில் புூவையும் போட்டையும்  பறித்து
முன்பின் தெரியாத
யாரே  ஒருவனுக்காக
தான் அடையாளத்தை மாற்றி
அவள் தோள் சாய்ந்து நிற்கும்
வேளையில் ..
அவரையே  யாரே  நால்வர்
துாக்கி சொல்கின்றனர்
இடுகாட்டை நோக்கி ....
இதே நான் இறந்து இருந்தால்
அவருக்கும் இதே நிலையாாா???????


      

No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...