Monday, December 10, 2018

ஆசை முகம்


யாழ் இசையில்
கீதம் பாட
பிஞ்சு விரலில்
அபிநயம் பிடிக்க
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
தத்தி  தாவி
மண்டியிட்டு
அழுகையில்  
நெஞ்சம் பிசையிது
கற்பனையில் ....
உன் வருகைகாக  காத்திருந்த நாட்கள்
கண கோடி
நீ உயிர் ஜனித்த 
நொடியில் உள்ள பூரிப்பும்
என்னவனுக்கு நான் செய்த சத்தியமும்
தாய்மையின்   ஏகாந்தமும்
விவரிக்க தெரியவில்லை
வாந்தி மயக்கமும் வாட்டி  எடுக்க 
மேடுட்ட மேனி சிலிர்பில்
ஆனந்த கங்கை ஏட்டி  பார்த்தது
உன் சின்ன அசைவில்
என்னவனின்  இருகிய முகம்
இளகியது ...
நாள் நெருங்க ...நெருங்க
இளகிய அகத்தில் 
பயம் குடியேறியது
உன் ஆசை முகம் கண்பேன்னே!!!!!


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...