Tuesday, December 4, 2018

திக்திக் நிமிடம்

தனிமை சிறையில்
நானும் என் மெளன மொழியும்
விடை தெரியா உலகில்
வினா தேடும் -பேதை
சுழலும் மின்விசிறியும்
ஒளமிடும் நாய்களுமே
என் சொந்தம் !!!!
அம்வாசை இருட்டும்
யாருமற்ற  இந்த அறையும்
கடிகாரத்தின் ஒசையுமே
என் வேறுமையின்  தோழன் !!!
அலைகின்ற மனசும்
சித்திரமில்லா சுவரும்
நாதியற்ற நெஞ்சமும்
சிரிக்க  மறந்த நாட்களுமே
என் அன்றாடம்!!!!!!
வழியாத  கண்ணீரும்
நனையாத தலையனையே
என் வாழ்நாள் லட்சியம் !!!!!
திக்திக் நிமிடமும்
பியானே கீதமும்
காற்றில் கரையாத
என் மறுபக்கம் !!!!!







No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...