Tuesday, February 26, 2019

கள்வா


உனக்காக ஏங்கி  தவிக்கும்
என் நெஞ்ச அலையில் 
நீந்தாமல்
என் கண்ணீர் துடைக்க விருவாயா??
என் எண்ண சுவடுகளை 
அறியாமல் காக்க வைக்காதடா கள்வா


Wednesday, January 9, 2019

பெரிய கோவில்

 பனி விலகாத காலை பொழுதில் நெற் கதிர்கள் மின்ன ஆடு மாடு புல் தரையில் மா கோலமிடும் எங்கள் தஞ்சை பெண்கள் ஒரு அற்புத  சிலையே .சூரியனுக்கு கூட தலை வணங்க பழகியது இல்லை யாம்   தஞ்சை பெரிய கோவிலிற்கு ...!தமிழகம் மாற்றும் தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் பரவி உள்ளது.அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இன்று கண்டுப்பிடிக்கும் சாதனைகளை அன்றே நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டனர் .அதானால் தான் இன்று வரை நம் முன்னோர்கள் மேற்கொண்ட எந்த ஒரு செயலுக்கு பின்பும், அறிவியல் ரீதியான உண்மை இருக்கும்..இது உலகத்தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்றே  சொல்லலாம்.கற் காலத்தில் கூட ஹை டெக் தொழி நுட்பத்தில்  கை தெந்தவர்கள் .உலகையே ஒரு நிமிடம் திருமாய் பாக்க வாய்த்த பெருமை யாம் ராஜா ராஜா சோழனையே சாரும் .நிமிர்த்த சிவனும் ,வளரும் நந்தியும் என்றும் அழியாத எட்டாவது  அதிசயம் .விண்ணுக்கும் மண்ணுக்கும் நடக்கும் இயற்கை யுத்தலில் என்றும் சாராத சோழன் பெருமை மட்டுறும் ஒரு சாட்சி 
Image result for periya kovil photos




Saturday, January 5, 2019

திருக்குறள்

   என்ன டா காலை ல எவ்ளோ கூட்டமா இருக்கு .போலீஸ் புடிக்கிறாங்க மச்சி .இவங்களுக்கு இது தான் வேலை .மாச கடைசி ஆனா போதும் நோ பார்க்கிங்  ல ஏன் வண்டிய நிப்பாட்டி  வச்சு  இருக்க .ரோடு ஏ இல்லாத தெருக்கு ரோடு தாஸ் வேற இந்த லச்சணத்துல . சரி வா 100 ரூபா காச குடுத்துட்டு போவோம் .சார் இந்தாங்க .என்னது இது. லஞ்சம். இத நா உன் கிட்ட கேட்டேன் ஆ .  இன்சூரன்ஸ் இருக்க ..இல்ல .அப்ப 10 திருக்குறள் சொல்லு .என்னது திருக்குறள் ஆஹா .சீகக்கிரம் சொல்லடு கிளம்பு .இத கூட தெரியாத .சொல்லுஅகரரா  முதத்ல எழுத்தெல்லாம் ஆத்தி பகவா ன் முதறே உல.ஹே ஒரு குரல் சொல்ல தெரில என படிச்சி இருக்க .பி.இ .இத கத்துக்கோங்க http://thirukkural.gokulnath.com/#/thirukkuralchapters/1/t          
  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  
  பகவன் முதற்றே உலகு

நீ சொல்லுற குரல் அ கேட்ட திருவள்ளுவர் கூட திருக்குறள் ஆஹ் மர்ந்துடுவாரு போல .போலீஸ்கரண் ஆஹா உண்டேனே  லஞ்சம் வாங்குவான் னு நீங்களே முடிவு பணிக்கிறது .தப்பு உங்க மேல ..நீங்க தான் காசு குடுத்து தப்பிச்சிடலாம் காசு குடுக்க ஆரம்பிச்சது . தப்பு இல்லாம  சொன்ன திருக்குறள் ஆஹ் ததிரும்பி சொல்லிட்டு போ  .அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Image result for thirukkural book images

Thursday, December 27, 2018

அருகாமை


என் தனிமை சிறையை 
போக்க வருவாய் யா டா
காதல் உயிரில்
கலந்து கொள்வாய்  யா
உன் இதழ்கள் பேசும்
மௌன மொழிகளை
என் கண்கள் அபிநயம் பிடிக்கும்
உன் அருகாமையில்


Tuesday, December 25, 2018

தேடல்


          ஏதே குழப்பமா இருக்கு .என்ன மனசு ல ஒடுது  னு தெரியல .நா எடுக்குற முடிவு சரியா இல்ல அப்பா ,அம்மா ஓட முடிவா  .32  வயசு ஆனா என்ன  .எனக்கு புடிச்சு இருக்கனும் ல என தனக்குள்ளே  வாதிட்டு கொண்டியிருந்தாள் கயல்..உனக்கு னு ஒரு துணை வேண்டாமா னு சித்ரா கதறாத  நாள் இல்லை ..ஏன் மா கல்யாணம் வேண்டாம் னு சொல்ற என்று மகளிடம் வஞ்சனையுடன் கேட்டார் மகாலிங்கம் .அப்பா உங்க கண்ணுக்கு தான் அது கல்யாணம் மாறி தெரியுது .ஆனா எனக்கு அது என்னமே என் அடிமை மாறி தெரியுது  பா..அம்மா உங்களுக்கு புடிக்காத நினைக்க கூட மாடாங்க.ஏப்பா  பாரு விரதாம் னு உங்களுக்காக வாழ்ந்தாங்க ஒழிய அவுங்க வாழ்கைய வாழவே  இல்ல ப்பா.எனக்கு கல்யாணம் பண்ணி ஒரு சிறை கைதி யா வாழ ஆச படல  .எனக்குள்ள நிறைய தேடலும் ,கேள்விகளும் இருக்கு அதுகான  விடை யை எங்க இருக்கு னு புரியல ப்பா... நேர் கொண்ட பார்வையில் வெளி எறினாள் ம.கயல் I.P.S புரியாத புதிர் என்று வேற்று புன்னகை ஊதித்தார்  மகாலிங்கம்


காதல் பரிசு


சிலேடை மொழியில்
எதுகை மோணை வடித்து
பொருந்தாத வரிகளும்
திணிக்கப்பட்ட கவிநயமும்
காகிதத்தில் அச்சிடப்பட்டாத எழுத்தும்
என் நெஞ்சில் இருக்கும்
காதலை தெரியபடுத
வழி தேடி அலைக்கிறோன்
சொல்லப்பட்ட காதலும்
சொல்லப்படாத ஏக்கமும்
என்னவன்  காணுகையில்
வார்த்தையற்ற சிலையன
நிற்கிறேன் அவன் அழகில்
வழிகளை சுமந்த
விழிகளுடன் தவிக்கிறோன்
தனிமையில்
இதய கடிகாரம்
அவனுக்காக  துடிக்கிறது
ஒவ்வொரு நொடியும்
எழுதப்பட்ட கடிதங்கள்
எல்லாம் முகவரியற்ற கிடக்கிறது
என் எண்ண பரணில்
அலைக்கின்ற அலைஒசை
எல்லாம் அவன்
பெயர் உச்சரிக்கிறது
என் துர்தஷ்டமா அல்ல
அவனின் அதிர்ஷ்டமா
பய புள்ள  என்கிட்ட
அடி வாங்கமா தப்பிசிடுமோ
எங்கள் திருமண பத்திரிகையை
ஒத்திகை பார்த்து பழகிய எனக்கு
அவனின் ஈமகரிய பத்திரிகை யை
கண்கள் நம்ப மறுகிறது
அவனுள்  என் காதலை
உணர்ந்த கணத்தில்
அவன் உயிரற்ற
சடலமே 
என் காதல் பரிசாகி  போனது ...


நீர்


காத்திருந்த விழிகள்
வலி நீர் சுமக்கிறது
உன் நினைவுகளோடு 
என் காதல் கணவா 
உன் வழி தடம் தேடி
என் விழிகள் கண்ணீர் அற்று
சுவாசிக்கிறது
என் உயிரில்  கலந்த
உன் காதல்


Wednesday, December 19, 2018

பணம்


நேசமில்லா உலகில்
பாசத்தை  தேடி அலைகிறோம்
பணம் என்ற வேற்று காகித்தோடு


மார்கழி


விடியாது காலையில்
  பனி விழுந்த
வண்ண மலர்கள்
நடுவில் மா கோலமிட்டேன்
மார்கழில்


Monday, December 17, 2018

சீதை


சிந்தனையில் விழி திறந்து
துயில் கொண்ட
என் சீதையை தேடி
வழி எங்கு
அவள் முகம் கண்டேன்
மேகத்தின் நிலவறையில்


Sunday, December 16, 2018

தண்டச்சோறு


             sweets எடுத்துக்கோங்க aunty ..ஏன் ராம் என்ன function வீட்டுல  .அம்மா என் கிட்ட ஒன்னும்  சொல்ல ல ..ஏன் aunty இப்ப மூச்சு விடாம  பேசுறிங்க ..அம்மா க்கே  அது சஸ்பன்ஸ் தான் .ஓஒஒ .எதுக்கு  னு சொல்லு
வேலை கிடைச்சிடுச்சு aunty .அது தான் ..வாழ்த்துக்கள் ராம் .எந்த கம்பெனி  எங்க  இருக்கு ..பெரிய கம்பெனி தான் னு ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பெயர் கூறினான் .பெரிய கம்பெனி னா நிறைய filter பண்ணி இருப்பங்களே .ஆமா aunty online ல  தான் interview attend பண்னேன்.டைம் ஆச்சு வரேன்.all the best .எல்லாம் நல்லதா நடக்கும் .
        என்ன சித்ரா புள்ள  வேலைக்கு போய்டான் இப்ப சந்தோஷம் தான ..உனக்கே  தெரியும் ல செல்வி .அவனுக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு னு ..எவ்வளவு certificate ,எவ்வளவு medal னு எவ்வளவு கப்
இருக்கு ஆனா சரியா வேலை கிடைக்கல னு  அவங்க அப்பா வேற திட்டிடே இருந்த ரு தண்டச்சோறு னு  ..அவர  சொல்லி என்ன பண்றது செல்வி
நல்ல படிக்குற புள்ள னு கடன  உடன  வாங்கி படிக்க வச்சோம் அதுக்கு வட்டி அவன் கட்டுவான் னு பார்த்த ..அதையும் நம்பளே கட்டுறோம் மே னு அவங்க அப்பா க்கு வேதனை .அந்த புள்ள வெளிளையும்  செல்ல முடியாம  உள்ளு  குள்ளே வச்சி  புளுங்கிட்டு .படிச்சிட்டு வேளை கிடைக்கல னு  குற்ற உணர்ச்சி நிறையவே இருந்துச்சி.என்னவே  புள்ள நல்லா இருந்த போதும்  சித்ரா நமக்கு ..
                என்ன வேணி  சாய்ந்து ற நேரத்து  ல இவ்வளவு கூட்டம்  ராம் வீட்டுல  .காலை  தான்  வேளைக்கு  போரன்  sweet எல்லாம் குடுத்துச்சு .வா என்ன னு போய் பார்ப்போம் .
ராமின்  உயிரற்ற சடலம் அவர்களை வரவேற்றது .அய்யே சித்ரா என்னது  அது காலை ல நல்ல போன புள்ள இப்படி வந்து இருக்கான் ..ராம் சட்டை ல இருந்துச்சு aunty .னு ராம் friend கார்த்திக் தார   .
அன்புள்ள அப்பாக்கு 
                  ராம் எழுதிக் கொள்வது ..நா நல்ல தான் அப்பா படிச்சேன் .gold medal வாங்கி photo  மாட்ட  மட்டும் தான் அது தேவை பட்டுச்சு .எனக்கு ஆயிரம் கனவு இருந்துச்சு பா ..நீங்க திட்டும்  போது கூட நான் கோவ  பட்டது இல்ல .உங்க கஷ்டத புரிச்சு படிச்ச  எனக்கு .வேலை குடுக்குறவனுக்கு உங்க கஷடம் புரிய ல பா..நானும் தேடாத வேலை இல்ல ..இந்த ,4வருஷ்சத்துல ஏறத கம்பெனி இல்ல ..கிடைச்ச வேலைக்கு போக மாட்டேன் படிச்ச வேலை க்கு தான் போகனும் னு வைரக்கியதோட தேடி ன வேலை பா இது ஏப்படியே  online ல தேடி பத்து வட்டி filter பண்ணி கிடைச்ச வேளை இது .ஆனா என்னோட கனவு தொலைச்சு போச்சு பா .நா நல்ல ஏமாந்துடேன் ..என் கிட்ட காசு வாங்கிட்டு ஏமாதிடான் அப்பா ..அம்மா தாலி வச்சு  குடுத்த  காசு பா..இந்த  25 வருஷ்சதுல என்னால  ஓன்னும்  மோ பண்ண முடியல ..என் கனவு துளைச்சு போச்சு பா..இனி நா உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன் ..யாரும் இப்படி கனவ  தொலைச்சிட்டு நிக்க  கூடாது .கோளையா  சாகல  பா .என் கனவு நினைவு ஏற ல னு ஆதங்கத்து ல போறோன..என் கனவுகளை நிஜமாக்க ..
                                             இப்படிக்கு
                                            உங்கள் தண்டச்சோறு
           


கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...