Thursday, December 27, 2018

அருகாமை


என் தனிமை சிறையை 
போக்க வருவாய் யா டா
காதல் உயிரில்
கலந்து கொள்வாய்  யா
உன் இதழ்கள் பேசும்
மௌன மொழிகளை
என் கண்கள் அபிநயம் பிடிக்கும்
உன் அருகாமையில்


Tuesday, December 25, 2018

தேடல்


          ஏதே குழப்பமா இருக்கு .என்ன மனசு ல ஒடுது  னு தெரியல .நா எடுக்குற முடிவு சரியா இல்ல அப்பா ,அம்மா ஓட முடிவா  .32  வயசு ஆனா என்ன  .எனக்கு புடிச்சு இருக்கனும் ல என தனக்குள்ளே  வாதிட்டு கொண்டியிருந்தாள் கயல்..உனக்கு னு ஒரு துணை வேண்டாமா னு சித்ரா கதறாத  நாள் இல்லை ..ஏன் மா கல்யாணம் வேண்டாம் னு சொல்ற என்று மகளிடம் வஞ்சனையுடன் கேட்டார் மகாலிங்கம் .அப்பா உங்க கண்ணுக்கு தான் அது கல்யாணம் மாறி தெரியுது .ஆனா எனக்கு அது என்னமே என் அடிமை மாறி தெரியுது  பா..அம்மா உங்களுக்கு புடிக்காத நினைக்க கூட மாடாங்க.ஏப்பா  பாரு விரதாம் னு உங்களுக்காக வாழ்ந்தாங்க ஒழிய அவுங்க வாழ்கைய வாழவே  இல்ல ப்பா.எனக்கு கல்யாணம் பண்ணி ஒரு சிறை கைதி யா வாழ ஆச படல  .எனக்குள்ள நிறைய தேடலும் ,கேள்விகளும் இருக்கு அதுகான  விடை யை எங்க இருக்கு னு புரியல ப்பா... நேர் கொண்ட பார்வையில் வெளி எறினாள் ம.கயல் I.P.S புரியாத புதிர் என்று வேற்று புன்னகை ஊதித்தார்  மகாலிங்கம்


காதல் பரிசு


சிலேடை மொழியில்
எதுகை மோணை வடித்து
பொருந்தாத வரிகளும்
திணிக்கப்பட்ட கவிநயமும்
காகிதத்தில் அச்சிடப்பட்டாத எழுத்தும்
என் நெஞ்சில் இருக்கும்
காதலை தெரியபடுத
வழி தேடி அலைக்கிறோன்
சொல்லப்பட்ட காதலும்
சொல்லப்படாத ஏக்கமும்
என்னவன்  காணுகையில்
வார்த்தையற்ற சிலையன
நிற்கிறேன் அவன் அழகில்
வழிகளை சுமந்த
விழிகளுடன் தவிக்கிறோன்
தனிமையில்
இதய கடிகாரம்
அவனுக்காக  துடிக்கிறது
ஒவ்வொரு நொடியும்
எழுதப்பட்ட கடிதங்கள்
எல்லாம் முகவரியற்ற கிடக்கிறது
என் எண்ண பரணில்
அலைக்கின்ற அலைஒசை
எல்லாம் அவன்
பெயர் உச்சரிக்கிறது
என் துர்தஷ்டமா அல்ல
அவனின் அதிர்ஷ்டமா
பய புள்ள  என்கிட்ட
அடி வாங்கமா தப்பிசிடுமோ
எங்கள் திருமண பத்திரிகையை
ஒத்திகை பார்த்து பழகிய எனக்கு
அவனின் ஈமகரிய பத்திரிகை யை
கண்கள் நம்ப மறுகிறது
அவனுள்  என் காதலை
உணர்ந்த கணத்தில்
அவன் உயிரற்ற
சடலமே 
என் காதல் பரிசாகி  போனது ...


நீர்


காத்திருந்த விழிகள்
வலி நீர் சுமக்கிறது
உன் நினைவுகளோடு 
என் காதல் கணவா 
உன் வழி தடம் தேடி
என் விழிகள் கண்ணீர் அற்று
சுவாசிக்கிறது
என் உயிரில்  கலந்த
உன் காதல்


Wednesday, December 19, 2018

பணம்


நேசமில்லா உலகில்
பாசத்தை  தேடி அலைகிறோம்
பணம் என்ற வேற்று காகித்தோடு


மார்கழி


விடியாது காலையில்
  பனி விழுந்த
வண்ண மலர்கள்
நடுவில் மா கோலமிட்டேன்
மார்கழில்


Monday, December 17, 2018

சீதை


சிந்தனையில் விழி திறந்து
துயில் கொண்ட
என் சீதையை தேடி
வழி எங்கு
அவள் முகம் கண்டேன்
மேகத்தின் நிலவறையில்


Sunday, December 16, 2018

தண்டச்சோறு


             sweets எடுத்துக்கோங்க aunty ..ஏன் ராம் என்ன function வீட்டுல  .அம்மா என் கிட்ட ஒன்னும்  சொல்ல ல ..ஏன் aunty இப்ப மூச்சு விடாம  பேசுறிங்க ..அம்மா க்கே  அது சஸ்பன்ஸ் தான் .ஓஒஒ .எதுக்கு  னு சொல்லு
வேலை கிடைச்சிடுச்சு aunty .அது தான் ..வாழ்த்துக்கள் ராம் .எந்த கம்பெனி  எங்க  இருக்கு ..பெரிய கம்பெனி தான் னு ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பெயர் கூறினான் .பெரிய கம்பெனி னா நிறைய filter பண்ணி இருப்பங்களே .ஆமா aunty online ல  தான் interview attend பண்னேன்.டைம் ஆச்சு வரேன்.all the best .எல்லாம் நல்லதா நடக்கும் .
        என்ன சித்ரா புள்ள  வேலைக்கு போய்டான் இப்ப சந்தோஷம் தான ..உனக்கே  தெரியும் ல செல்வி .அவனுக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு னு ..எவ்வளவு certificate ,எவ்வளவு medal னு எவ்வளவு கப்
இருக்கு ஆனா சரியா வேலை கிடைக்கல னு  அவங்க அப்பா வேற திட்டிடே இருந்த ரு தண்டச்சோறு னு  ..அவர  சொல்லி என்ன பண்றது செல்வி
நல்ல படிக்குற புள்ள னு கடன  உடன  வாங்கி படிக்க வச்சோம் அதுக்கு வட்டி அவன் கட்டுவான் னு பார்த்த ..அதையும் நம்பளே கட்டுறோம் மே னு அவங்க அப்பா க்கு வேதனை .அந்த புள்ள வெளிளையும்  செல்ல முடியாம  உள்ளு  குள்ளே வச்சி  புளுங்கிட்டு .படிச்சிட்டு வேளை கிடைக்கல னு  குற்ற உணர்ச்சி நிறையவே இருந்துச்சி.என்னவே  புள்ள நல்லா இருந்த போதும்  சித்ரா நமக்கு ..
                என்ன வேணி  சாய்ந்து ற நேரத்து  ல இவ்வளவு கூட்டம்  ராம் வீட்டுல  .காலை  தான்  வேளைக்கு  போரன்  sweet எல்லாம் குடுத்துச்சு .வா என்ன னு போய் பார்ப்போம் .
ராமின்  உயிரற்ற சடலம் அவர்களை வரவேற்றது .அய்யே சித்ரா என்னது  அது காலை ல நல்ல போன புள்ள இப்படி வந்து இருக்கான் ..ராம் சட்டை ல இருந்துச்சு aunty .னு ராம் friend கார்த்திக் தார   .
அன்புள்ள அப்பாக்கு 
                  ராம் எழுதிக் கொள்வது ..நா நல்ல தான் அப்பா படிச்சேன் .gold medal வாங்கி photo  மாட்ட  மட்டும் தான் அது தேவை பட்டுச்சு .எனக்கு ஆயிரம் கனவு இருந்துச்சு பா ..நீங்க திட்டும்  போது கூட நான் கோவ  பட்டது இல்ல .உங்க கஷ்டத புரிச்சு படிச்ச  எனக்கு .வேலை குடுக்குறவனுக்கு உங்க கஷடம் புரிய ல பா..நானும் தேடாத வேலை இல்ல ..இந்த ,4வருஷ்சத்துல ஏறத கம்பெனி இல்ல ..கிடைச்ச வேலைக்கு போக மாட்டேன் படிச்ச வேலை க்கு தான் போகனும் னு வைரக்கியதோட தேடி ன வேலை பா இது ஏப்படியே  online ல தேடி பத்து வட்டி filter பண்ணி கிடைச்ச வேளை இது .ஆனா என்னோட கனவு தொலைச்சு போச்சு பா .நா நல்ல ஏமாந்துடேன் ..என் கிட்ட காசு வாங்கிட்டு ஏமாதிடான் அப்பா ..அம்மா தாலி வச்சு  குடுத்த  காசு பா..இந்த  25 வருஷ்சதுல என்னால  ஓன்னும்  மோ பண்ண முடியல ..என் கனவு துளைச்சு போச்சு பா..இனி நா உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன் ..யாரும் இப்படி கனவ  தொலைச்சிட்டு நிக்க  கூடாது .கோளையா  சாகல  பா .என் கனவு நினைவு ஏற ல னு ஆதங்கத்து ல போறோன..என் கனவுகளை நிஜமாக்க ..
                                             இப்படிக்கு
                                            உங்கள் தண்டச்சோறு
           


Friday, December 14, 2018

மேடை நாகரிகம்

          ஒரு பிரபல நடிகர் ஒருவர் .. ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி குடுத்துடு இருக்காரு  .நீங்க யாரால இந்த இ்டத்துல இருக்குரிங்க னு கேள்வி கேக்குறங்க அதுக்கு
அந்த  நடிகர்  எங்க அப்பா னு சொல்ற று..பாராட்ட வேண்டிய விஷயம்   ..அப்புறம்
அந்த ஆளு என்ன எப்பவும் ஏன் இப்படி பண்ற   னு ஒரு வார்த்தை கேட்டது இல்ல
னு பேட்டி முழுக்க அப்பா வ அந்த ஆளு தான் குறிப்பிட்டார்..அப்பா பையன் றது ஒரு அழகான உறவு .நம்ப அப்பா வ நம்ப எப்படி வேணாலும் குப்புட்டுக்கலாம் அது தப்பு இல்ல .அப்பா வோட ஒரு நல்ல தோழன் நமக்குகிடைக்கவே  கிடைக்காது .ஆனா அந்த உரிமை எல்லா யாரும் இல்லாத நேரதுல கூப்புடுக்கலாம் மேடை நாகரிகம் னு
ஒன்னு  இருக்க .அந்த நிகழ்ச்சி கண்டிப்பா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு வாங்க
சின்ன குழந்தைங்க எல்லாம் பாப்பங்க .குழந்தைங்க பெரியவங்க  என்ன பண்றங்களே அத தான் பண்ணுவங்க ..அதுவும்ந டிகர்னா  சும்மா வ அப்படியே பண்ணுவங்க
கொஞ்சம் அதை மாத்திக்கலம் ...

Wednesday, December 12, 2018

வெட்கம்


கண்முடி திறக்கும் நொடியில்
மின்னலாய் வந்து சென்றது
உந்தன் முகம்
அத்தி பூத்ததை போல்
உன் கடை கண் பார்வையை
என் நெஞ்ச குருதியை
குடிக்கும் உன் நினைவுகளில்
முடிவில்லா இரவில்
என் தொடர் கதை- நீ.


Monday, December 10, 2018

ஆசை முகம்


யாழ் இசையில்
கீதம் பாட
பிஞ்சு விரலில்
அபிநயம் பிடிக்க
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
தத்தி  தாவி
மண்டியிட்டு
அழுகையில்  
நெஞ்சம் பிசையிது
கற்பனையில் ....
உன் வருகைகாக  காத்திருந்த நாட்கள்
கண கோடி
நீ உயிர் ஜனித்த 
நொடியில் உள்ள பூரிப்பும்
என்னவனுக்கு நான் செய்த சத்தியமும்
தாய்மையின்   ஏகாந்தமும்
விவரிக்க தெரியவில்லை
வாந்தி மயக்கமும் வாட்டி  எடுக்க 
மேடுட்ட மேனி சிலிர்பில்
ஆனந்த கங்கை ஏட்டி  பார்த்தது
உன் சின்ன அசைவில்
என்னவனின்  இருகிய முகம்
இளகியது ...
நாள் நெருங்க ...நெருங்க
இளகிய அகத்தில் 
பயம் குடியேறியது
உன் ஆசை முகம் கண்பேன்னே!!!!!


தலைப்பில்லை


விதி என்று சொல்வதா அல்ல
இறைவனின் சதியா ?
வெள்ளைக் காகிததில்
மை திண்டாத பக்கங்கள்
எல்லையில்லா வானத்தின்
படருும்  சோகங்கள் 
முடிவில்லா தொடர்கதைக்கு
பல கோணங்கள்
ஏன் சம்பந்தமில்லாமல்
ஏதே உளறுகிறோன்
மதுவை சுவைத்த 
போதையா அல்ல
மாதுவை  நினைத்த
ஏக்கங்களா
தூக்கமில்லாமல்  அலைக்கிறோன்னே
காதல் தந்த மயக்கமா  அல்ல
மதிய உறக்கமா
நெஞ்சத்தை பிளிறும்
காரணம் என்னஓ
phone ah noondikitey iruntha
ipd thaan irukum  என்று
அம்மா கத்த 
அம்மா சொல்றது உண்மையோ  🤔🤔🤔


Saturday, December 8, 2018

Social media

சிலதை  மறந்து
பலதை  வெறுத்து
காணாத்ததை  கண்டத்தை போல் ரசித்து
இம்மியும்  நுழைய முடியாத
வாய்க்குள் பூந்து 
தேவையற்றதை பேசி 
ஊரு வம்பு அலந்து
அக்கம்  பக்கம் 
புரலி  பேசி
தெரிந்தவர் தெரியாதவர்
என்று வேறுபாடு இன்றி
கதை அடித்து
சிர் அழிந்து
இளைய  சமூகத்தின்
பலி சுமத்தி 
போலியாக  நடிப்பதற்கு பெயரே
social media


யாரிடம் சொல்வேன்


என்னை பார்த்து கண்ணடித்ததை 
மின்னலைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!
என்னை வஞ்சிய 
சூரியனைப் பற்றி
யாரிடம்  சொல்வேன் !!!!
அலைகின்ற அலைகள் எல்லாம்
என்னை வருடி சென்றதை 
யாரிடம் சொல்வேன் !!!
பிறைமதி சந்திரன்
என்னைப் பார்த்து
சிரித்ததைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
குயில் எனக்காக பாடிய
கானத்தைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
நட்சத்திரம் பறந்தைப்
பற்றி யாரிடம் சொல்வேன்
ஜிலேபியின் ருசியை 
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!!
பூ என்னை பார்த்து பூத்ததை 
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!
வானவில் விரிந்ததை பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!!
அவ்வளவு சொல்ல நினைத்த
எனக்கு 
பிரம்மன் என்னை படைக்கும்
போது power cut pola
கண்ணை படைக்க power இயலவில்லை
ups இல்லாத கற் காலம் அதல்லவா !!!!


பேனா கோமாளி


எதாவது எழுதலாம் என்று
பேனா எடுத்தேன்
மனம் எங்கு எங்கே சென்றது
அலைப்பாய்ந்த மனதை கட்டுபடுத்தி
எழுத தொடங்கினேன் 
வார்த்தைகள் வர மறுத்தது
நடப்பதை  எழுத நினைத்தேன்
எழுச்சி உரைக்க
அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நினைப்பதை  எழுத  சிந்திதேன்
நம் நினைப்பதை  எழுத
நீ என்ன கதாயசிரியர்ரா
என்று மனசாட்சி ஒரல்  கொடுத்து
நீ நினைப்பது ஒன்று இங்கு
நடப்பதில்லை என்று
மூளை நினைவுடியது
வேற்று காகிதத்தை  உற்று
பார்த்தேன் என்னே 
கண்கரித்தது
மாசில்லா  இந்த உலகத்தில்
உயிற்று வாழ்கிறோம்
பொய்களை  உண்மை என்று நம்பி
ஏமாறுகிறோம் கோமளியாய் ....


Friday, December 7, 2018

மக்கள் கையில் அதிகாரமிருந்தால்

தடயங்கள் மறைத்து
வேஷம் திரித்து 
திரியும் காவி வெட்டி
கையில் மிக்ச்சர் அரசியல் இருந்து
இருக்காது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால் !!!!

நிவாரணம் கேட்டு
யாரு கையையும் ஏந்தி நிறக் அவசியமில்லை
நம்ம விவசாயம் பொருளை
அடுத்தவர் விலை நிர்ணய செய்வது நியாயமா????
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

வெளிநாட்டு வாள் பிரதமர்
நம்பி இந்தியா இருக்கையில்
செற்றின் விழியும் 
சேற்றின் வேதனையும் அவர் அறிவாறா???
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!

சூரியன் உதயமாக்கும்
தாமரை மலரும்
மாறி மாறி
Tweet செய்து ஆள் பலத்தையும்
ஆட்சி அதிகாரத்தையும்
கடற்கரையில் சமாதி
எழுப்புவதில் காட்டும் ஆர்வத்தை
Neet ல் காட்டியிருக்களம்
மக்கள் கையில்  அதிகாரமிருந்தால்!!!!

ஊழலிலும் swiss லும்
மூழ்கி முத்து எடுத்தவர்களுக்கு  எல்லாம்
கந்து வட்டி கொடுமை தெரியுமா என்ன??
Oxgyen cylinder இல்லாமல்
குழந்தை இறப்பதும்
எலி கடித்து கெதர்வதும்
எல்லாம் வேறு எங்கும் அரங்கேறாது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

கூத்தாடியை கூத்தாடியாகவே   பார்த்துயிருந்தால்  அவனும் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்க மாட்டான்
யாரே எழுதிய கதைக்கு
நடிக்க தெரிந்தவருக்கு
மக்கள் குறையை அறிய முடியுமா??
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

மக்கள் கையில் அதிகாரமிருந்தால்
இந்தியா அடிமையாய் இருந்து இருக்காது
ராஜிவ்  கொலை குற்றவாளி யாரு என்று தெரிந்து இருக்கும்
தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள்
விடுதலை அடைந்து இருக்க மாட்டார்கள்
பாரதியும் உ.வே.சா வும்
தேசய  தந்தை ஆகியிருப்பர்கள்
Notta பற்றி உலக அறிந்துயிருக்காது
பாபர் மசூதியே ராமர் கோவில் லே
144 தடை தேவையில்லை
வரி கட்ட தெரிந்த நமக்கு
அதற்கான கணக்கு கேட்க தெரியவில்லை
#Me too விற்கான தண்டனை எப்போதோ
கிடைத்துயிருக்கும்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!


Thursday, December 6, 2018

காபி


நிரந்திமில்லா உலகில்
தொலைந்ததை  தேடி
அலைந்து கலைத்து
வாழ்க்கையை தொலைத்து
நிற்கையில் 
இன்னதனெற்று
புரிகிறது
காபி குடிக்கும்
நொடியில்....


அன்ன நடை


மாலை அந்தி வானம்
அவளை தேட
சூரியன் மயங்கி
செக்கி  நிற்க
என்னவளின் அன்ன நடையில்!!!


Wednesday, December 5, 2018

என் அப்பச்சி


what's up ல் பேசி
imo வில் சிரித்து
skype யில் முறைத்தாலும்
உன்னை நினைத்து
ஏங்காத நாளில்லை 
இது காதலனை நினைத்த உருக்கமில்லை
என் தந்தையை பற்றிய வருத்தம்
வெளிநாட்டு வாழ்க்கை மெழுகுவர்த்தியாய்
கரைய
அன்னிய நாட்டு கரண்சி 
சென்செக்ஸ் ல் ஏரினாலும்
நீ விட்டு சென்ற வேற்றிடம்  மட்டும் மறையவில்லையே ஏன் ப்பா !!!!!
உன்னிடம்  சண்டைப்பிடிப்பதற்காகவே
படித்த நாளிதழ் எல்லாம்
சீண்ட  ஆள்ளில்லாமல் இருக்கிறது !!!
என்னுடன் tom and jerry யை பார்த்து
tennis விளையாடி
speed ஆ போ ப்பா
என் மழலை ரசித்து
lolly pop யை சுவைத்து 
என் பொம்மையாகவே மாறிய
அவர் ...என்றுமே
அவருடைய நகல் நான் !!!!
உன் வருகைகாக  காத்துயிருந்த
என் கண்கள் பூத்துவிட்டது
நாள்காட்டியில் எண்ணிக்கொண்டே இருக்கிறேன் இன்னும்
1 வருடம் 5 மாதம் 3 நாட்கள்காக காத்திருக்கிறது உன் குயில் கூடு 
காத்திரு....
காத்திரிக்கிறோம்......
காத்துக்கொண்டு  இருப்போம்.....


Tuesday, December 4, 2018

திக்திக் நிமிடம்

தனிமை சிறையில்
நானும் என் மெளன மொழியும்
விடை தெரியா உலகில்
வினா தேடும் -பேதை
சுழலும் மின்விசிறியும்
ஒளமிடும் நாய்களுமே
என் சொந்தம் !!!!
அம்வாசை இருட்டும்
யாருமற்ற  இந்த அறையும்
கடிகாரத்தின் ஒசையுமே
என் வேறுமையின்  தோழன் !!!
அலைகின்ற மனசும்
சித்திரமில்லா சுவரும்
நாதியற்ற நெஞ்சமும்
சிரிக்க  மறந்த நாட்களுமே
என் அன்றாடம்!!!!!!
வழியாத  கண்ணீரும்
நனையாத தலையனையே
என் வாழ்நாள் லட்சியம் !!!!!
திக்திக் நிமிடமும்
பியானே கீதமும்
காற்றில் கரையாத
என் மறுபக்கம் !!!!!







பாட்டியின் வடை

 யாருமற்ற சாலையில்
நில ஒளியில்
நீயும் நானும்
ஒருவர் தோள் ஒருவர் சாயந்து
தென்றல் காற்று வீச
ஏங்குயிருந்தே வந்த நாணம்
என்னை தொற்றிக்கொள்ள
நட்சத்திரம் அதை படம்பிடிக்க
தேவர்கள் தூவிய மலர்கள் எல்லாம்
மரங்கள் ஊதிர்க்க
இளையராஜா இசையில்
நாம் கரைந்திட
கருமேகம் சூழச்சி செய்ய
முடிவில்லா பாதையில்
சேர்ந்தே செல்வோம்  நிலவிற்கு
பாட்டியின்  வடையை  சுவைக்க !!!!!


Sunday, December 2, 2018

ராசி

             ராசி ற முட நம்பிக்கை இந்த 21 ஆம் நூற்றாண்டு ல கூட இருக்கு ..கைம்பெண் ஆண்களுக்கு மூன்னாடி வர கூடாது னு இந்த மாறி மூட பக்தி  இன்னும் இருக்கு ..அது விஞ்ஞான உலகம் ..நீங்க நார்திக வாதிய   னு யோசிக்காதிங்க...வெள்ளி ,செவ்வாய் விளக்கு ஏத்துறதையும் ,அம்மனுக்கு கூழ் ஊத்துறத்தையும் தப்பு சொல்ல ல ..நமக்கு மேல ஓரு சக்தி இருக்கு அது ஏசுவா ,அல்லவா ,முருகன னு தெரியல ..தெரிச்சுக்கவும் விரும்பல  ...அய்யே  அவ  முகத்துல முழிச்சிய ராசியில்லாத வ ..என்ன நடக்குமே னு அவுங்க முன்னாடியே சொல்றது..புதுச ஒரு பெண் கல்யாணம் ஆகி வந்த அப்புறம் பல்லு  போன கிழவி செத்த கூட அந்த பெண்ணு  தான் காரணம் னு சொல்றது  எல்லாம் dinosaurs காலத்து ல கேட்டது இப்ப கண் கூட பார்க்கும் போது மனசு வழிக்கிது..கல்யாணம் ஆகி மூழுச 5 மாசம் புருஷன் கூட ஒழுங்க வாழாத   பெண்ண கைம்பெண் னு சடங்கு ,சம்பர்தாயம் எல்லாம் பண்ணி நல்லதுக்கு வாரத..உங்க பெண்ண கூட்டிட்டு  வராதிங்க அண்ணி னு மனசு ல கொஞ்சம் கூட இறம்  இல்லாம சொல்லுவங்க ..இத  கேட்டு ஒரு ஜோடி கண்கள் கண்ணீர் வடிக்கும் சத்தம் இல்லாம  கதவுக்கு  பின்னாடி..இத  விட கொடுமை பிறக்குறது  முன்னாடியே அப்பான  முழுங்கிடு னு வாய் கூசம சொல்லுவங்க அந்த குழந்தை இன்னும் உலகத்தையே  பார்க்கல ..அது குள்ள அதோட  ராசி அ சொல்றது....பெண்ணு பார்க்குறது முன்னாடி அந்த மாப்பிள்ளை வீட்டு நாய் குட்டிக்கு அடிப்பட்டா கூட அந்த பெண் ராசியில்ல னு  சொல்றது அவுங்க கிட்ட மட்டும் சொல்லாம  எல்லாரு  கிட்டையும் சொல்றது.அந்த பெண்ண பாக்குரிங்கள அய்யே  அந்த பெண்ணு வேண்டாம் ராசியில்ல  ...   எங்க பெண்ணுக்கு மட்டும் தான் ராசி யா அந்த பையனுக்கு இல்லையா..ஏப்பா  பாரு பெண்ணு மேல தான் தப்பா..


 
 நான் பிறந்த அன்று மகாலட்சுமி பிறந்துவிட்டாள்  என்று மகிழ்ந்த சொந்தம் எங்கே....
நெற்றியில் திலகமிட்டு
புத்தாடை உடுத்தி
மாமன் சீர் செய்து
ஊற்றார்  உறவினர்கள் கூடி
ஆடு அறுத்து
கேடா வெட்டி
விழாவிற்கு வந்து
வீட்டில் பெண் இருக்கும் விசியத்தை பரப்பி
அப்பே வந்த சொந்த  பந்தம் .
அதே பெண் கணவனை இழந்த நிலையில் புூவையும் போட்டையும்  பறித்து
முன்பின் தெரியாத
யாரே  ஒருவனுக்காக
தான் அடையாளத்தை மாற்றி
அவள் தோள் சாய்ந்து நிற்கும்
வேளையில் ..
அவரையே  யாரே  நால்வர்
துாக்கி சொல்கின்றனர்
இடுகாட்டை நோக்கி ....
இதே நான் இறந்து இருந்தால்
அவருக்கும் இதே நிலையாாா???????


      

தங்கச்சி

        நதி ல அரம்பிச்சு ,பரதம் வரைக்கும் பெம்புளைங்க ஆட்சி தான்...நம்ப விட்டுல இருக்குற வாண்டு வரைக்கும் அதேட power அ காம்பிக்கும்.நம்ப தான் fuse  பல்பு  மாறி ....அண்ணன் ,தம்பி குட பெறந்தவன் எல்லாம் சந்தோஷ்மா தான்இருக்கான் ...இந்த அக்காகும் ,தங்கச்சிகும் இடையில் ல நான் பெறந்துடு நா படுற  கஷ்டம் 😭😭😭காலைல எழுந்திரிசந்து இருந்து ராத்திரி துங்குற  வரைக்கும் ஒரு மனுசன்  எவ்வளவு வேலை தான் பாப்பான் நீங்களே செல்லுங்க ....காலை ள எனக்கு சுப்புரபாதமே தடி மாடு மார்க்கெட் போ டா தான் ...அதுவும் sunday வா இருந்த என் பாடு ரொம்ப திண்ட்டாம் தான்.இஞ்சி வேண்ணும்  ,கறிவேப்பிலை வேண்ணும் சொலற வாய்க்கு அத  ஓரதா சொல்லும் தெரியாது .நம்ப அடிகடி கடைக்கு  வரத பார்த்து அவன் பெண்ண  correct பண்ண வறோம் நினைச்ச மோரைப்பன் அந்த கடைக்காரன்.சரி வேலை ய தான் முடிச்சிடோம் டிவிபாக்கலாம்  னு உட்காந்து sports சானல் வச்ச  அவ்வளவு
நேர எங்க இருந்து வருவானே  தெரியாது  அம்மா பருங்கககககககககககககககககககககக remote அ புடுங்கிடான்    னு ..ஏ நான் ஒன்னுமே பண்ணல. ...டேய் னு அம்மா கரண்டிய விசுவாங்க ...சரி னு சாப்புட உட்காந்த  கறி எல்லாம் அவளுக்கு போட்டு வேறு நல்லிய மட்டும் போடுவாங்க  ...ஆனா அந்த character வீட்டு ல இல்லன அவ்வளே அமைதியான இருக்கும் வீடு எதுவும் எங்க அப்பா இவள  தாங்குறத பார்த்த என்னமே இவள  தான் கஷ்ட  பட்டு பெத்த மாறியும் என்ன தவுட்டுக்கு வாங்க மாறி தான் பண்ணுறங்க ...கொடும டா அதுவும் இந்த pick and drop வேல இருக்கே 😭😭😭😭driver னு தான் சொல்ற முடியாது ..driver தான் .முடியாது னு சொல்லுங்க ஜி னு தான்ன சொல்ல  சொல்றிங்க அப்பா கிட்ட சொல்லி குடுக்குற pocket மணிய  கட் பண்ணிடுவா ..அப்படி எல்லாம் இருந்துடு இப்ப வேற வீட்டுக்கு போய்ட்ட ற த நம்ப முடிய ல 😏😏😏இது குட பரவல  என்ன மாறி இன்ன ஒருத்தன் மாட்டிக்கிடான் ..என்னயே  அப்படிஅடிப்பா  அப்ப  அவ புருஷன் ன எப்படி அடிப்பா  😂😂😂...போகும் போது அண்ணா னு குப்புடா இன்னைக்கு தான் அவ  அப்படி குப்புடு  கேட்குறோன் .miss pannuven ...என்ன feel பண்ணுறிய இனி சட்டை ல pocket இல்லாத சட்டை ய வாங்கி தர சொல்றோன் னு அழுது கிட்டே  சொன்ன 😂😂😂இந்த மாறி ஒரு life வாழ குடுத்து  வச்சு  இருக்கனும்

 ஒரு தாய் வயிற்றில்பிறந்தாலும்
 நீயே என் முதல் தோழி
 Remote ku சண்டை பிடித்தாலும்
பொறி உருண்டையில்  ஒன்று குடினோம்  எங்க வீட்டின் சுவர்களில்     
  அவள்   சித்திரமே
அவள் teaddy bear குட என்னை போட்டு கொடுக்க தெரியும்
அவள் கண்ண  கலங்கி நின்றதில்லை
அவ எண்ண ஒட்டங்களை  அறிந்திட  தவறியதில்லை
அவள் குறும்புகளை ரசித்தில்லை
அவளை கண்டிக்கவும் மறந்தில்லை
தங்கையானபிறந்தாலும்
அவளே என் முதல் குழந்தை!!!!



Saturday, December 1, 2018

பெண்ணியம்

வாள் ஏந்திய வீரர்களை விட
 புத்தி  திட்டிய ஓளவைக்கே  இன்று புகழ்
 புகழ் மாலையை தேடு வதை விட                   அறிவுசுடர்ரை  கூர்மையாக்கு பெண்ணே
பிறந்த மண்ணில் கால் தடங்களை 
அச்சிட வா பெண்ணே
சிற்றார்கள்   மத்தியில்
எதற்கும் அஞ்சாதே
துணிந்து நில்
ஏன் என்று கேள்வி கேட்கும் முன்
திருவாய் மோழியாதே
எவருக்கும் பதில் கூறும் அவசியம் உனக்கில்லை ...
தோழனாய் வந்தால் நேச காரம் நீட்டு
காதல் என்னும் வரையில் விழாதே
திருமணம் பந்தத்தை  நினைக்காதே
தலையே  போனலும்
தலை குனியதே
நெஞ்சை நிமிர்த்தி கொள்
நீ பெண் என்று ....
ஆண்ணுக்கு  உருவம்
கொடுத்தவளே பெண் தான்
துப்பாக்கில் இருந்து வரும் தோட்டவாக இரு
கண்களில் பூசும் மை அழகு வேண்டாம்
உன் மெய் அழகு மட்டும் போதும் !!!!!

 


   

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...